


கடந்த ஆண்டு வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நேரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்து பிரபலமான சுஜா வருணியும் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கின்ற சிவகுமாரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் சமீபத்தில் திருமணம் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் கமல்ஹாசன் கட்சிப்பணிகளின் காரணமாக கலந்துகொள்ளவில்லை. பின்னர் மணமக்கள் இருவரும் கமலை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமலை தன் தந்தையென அழைத்த சுஜா, அவரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்திருந்தார். இந்நிலையில் தற்போது மாறாக நடிகர் கமல்ஹாசன் சுஜா, சிவகுமார் தம்பதியினரை அழைத்து பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை சுஜா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.