Skip to main content

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் கே.பாக்யராஜ் 

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
k baghyaraj

 

 

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு கதை திருட்டு பிரச்சினை காரணமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார் இயக்குனர் கே.பாக்யராஜ். இதையடுத்து பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தலைவர் ஆவேன் என பாக்யராஜ் அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் அவரது சமாதானத்தை ஏற்காத தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட 21 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நிர்வாகிகளின் முடிவை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ் தனது முடிவை மாற்றிக்கொண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தற்போது மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.இதை சென்னையில் நடைபெற்ற 'கோகோ மாக்கோ' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை அவர் உறுதி செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாங்கெல்லாம் இருக்கோம்...” - ஆந்திரா தயாரிப்பாளருக்கு தைரியமூட்டிய பாக்யராஜ்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

 Yennai Maatrum Kadhale Audio Launch Bhagyaraj Speech

 

சென்னையில் நேற்று (08/11/2022) நடைபெற்ற 'என்னை மாற்றும் காதலே" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், திரைப்பட இயக்குநருமான பாக்யராஜ், "இந்த ஃபங்ஷன் நடக்கறதுல கொஞ்சம் டவுட் இருந்துச்சு. ஏன்னா, கொஞ்சம் நிறைய இடைஞ்சல்லாம் வந்து புரொடியூசரும் நானும், பண்ண முடியுமா? முடியாதா? கண்கலங்கி உட்கார்ந்திட்டு இருந்தாரு புரொடியூசர். அப்ப எனக்கு டக்குனு மைண்டுக்கு வந்தது பண்ணணுமேனு அப்படினு சொல்லும் போது, விஜய் முரளிக்கு மட்டும் போன் அடிச்சேன். இந்த மாதிரி ஒரு ப்ராப்ளம். கொஞ்சம் கரெக்ட் பண்ணி எப்படியாவது உடனடியா ஃபங்ஷன பண்ணணும் அப்படினேன். அப்புறம் உடனே எல்லாருக்கும் போன் அடிச்சி, அப்புறம் டைமண்ட் பாபு கிட்ட ஒரு வார்த்தை நீங்க பேசுங்கன்னு சொல்லி, அவருக்கும் நான் போன் பண்ணி பேசினேன். 

 

நான் வந்து அவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்ட காரணம் என்னனா, நம்ம தமிழ்நாட்டுல இருக்கோம். நம்மல நம்பி ஆந்திராவில இருந்து வந்து ஒரு புரொடியூசர் படம் எடுக்கும் போது, அவருக்கு நாம என்ன செய்யறோம் என்பது முக்கியம் இல்லையா. எவ்வளவு தூரம் கை கொடுத்து நாம அரவணைச்சு போகணும். அவர கஷ்டப்படுத்துறமே அப்படிங்கறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. 

 

நடிகை துளசி ரொம்ப பீல் பண்ணி பேசினாங்க. எனக்கு ரொம்ப அது டச்சிங்கா இருந்துச்சு. என்னனா, இந்த புரொடியூசர் எவ்வளவு கஷ்டப்பட்டு, பொண்ணு கல்யாணத்துக்காக வச்சிருந்த பணத்தை... விஷப்பரீட்சையான சமாச்சாரம். அதை அவரு செஞ்சிருக்கவே கூடாது. ஆனா தெரிஞ்சோ தெரியாமையோ அவர் ஏற்கனவே புரொடக்சஷன் மேனேஜர் வேலை பார்த்துருக்காரு. அவர் எப்படி, இப்படி ஏமாந்து, உள்ள வந்து கால வச்சாருனு எனக்கு புரியல. இரண்டு லாங்குவேஜ்ல படம் பண்ணிருக்காரு. 

 

செம்பினு சொல்லிட்டு ஒரு படம். அந்த படம் ஆடியோ ஃபங்ஷனுக்கு போயிருந்தேன். ஃபர்ஸ்ட் ஷாட் போட்டதுமே கிளாப்ஸ் அடிச்சாங்க. ஏனா போட்டோகிராஃபி ஃபர்ஸ்ட் ஷாட்டு அவ்வளோ அழகா இருந்தது. இதிலும், அதே அளவு கைத்தட்டுற அளவுக்கு ஃபர்ஸ்ட் ஷாட் எடுத்ததுமே போட்டது. அந்த லொக்கேஷன் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. ஒரு பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட பரவால, கேமராமேன், டைரக்டர் என்ன லைக் பண்றாங்களோ எடுக்கட்டும். அப்படினு சொல்லி என்ன செலவானாலும் பரவாலனு சொல்லி, கேரளா, அங்க, இங்கனு எல்லா இடத்துக்கும் சுத்தி இந்த படத்துக்காக அவரு வந்து செலவு பண்ணிருக்காரு. 

 

நான் பெருசா இதுல ஒன்னும் பண்ணல. என்னை நடிக்கணும்னு சொன்னாங்க. சரி அப்படினு ஒத்துக்கிட்டு, இரண்டு நாள் தானே நடிக்கணும், அப்படினாங்க. ஒரு நாள் இங்க எடுத்தாங்க. ஒரு நாள் பாண்டிச்சேரி போய் எடுத்தாங்க. இப்ப நினைச்சு பார்க்கறேன் நானு. பாண்டிச்சேரில என்னோட சூட்டிங்கோட முடியுது. பூசணிக்காய் உடைக்கிறாங்க. நைட் இரண்டு, மூணு மணிக்கு வந்து படுத்து காலைல 11 மணிக்கு எழுந்திருக்கும் போது தான் நம்ம சின்னக்கலைவாணர் இறந்துட்டாருனு போன் வருது. அப்புறம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் எதோ புறப்பட்டேன். 

 

எதுக்கு சொல்ல வரேன்னா, அன்னையில் இருந்து படம் முடிஞ்சி போச்சு. இன்னைக்கும் வரைக்கும் பாருங்க. இவ்வளவு நாள் ஆயிருக்கு. இன்னைக்கு கரெக்ட்டா கிரகணத்துக்குள்ள வந்து மாட்டிருக்காரு. பரவால கிரகணம் 05.11 ஓட விலகிடுச்சி. உங்களுக்கும் கிரகணம் விலகுனதுனு சொல்லி நினைச்சிக்கலாம். துளசி அவ்வளவு தூரம் வார்ன் பண்ணி சொல்லியும் கூட அவர் அறியாமலே எப்படி எப்படியோ செலவ இழுத்துட்டு போயிருக்கு. இருந்தாக்கூட, அவர் எப்படியாவது கரையேறனும்னு சொல்லிட்டு படம் நல்லா வரணும் அப்படினு சொல்லிட்டு பிரார்த்திப்போம். 

 

ஆனால், அப்படி ஏதாவது கையக் கடிக்கிற மாதிரி ஏதாவது வந்தாக் கூட, அவங்க சொன்னாங்களே உங்க பொண்ணு கல்யாணம் நல்லா நடக்கணும்னு. அதுக்கு நாங்களெல்லாம் தமிழ்ல எதாவது பண்ணி உங்களுக்கு ஏதாவது பண்றோம். அதனால நீங்க நம்பிக்கையோடு இருக்கலாம்." என்றார்.

 

 

Next Story

"அப்பா ரொம்ப ஃபீல் பண்ணாரு... சாரி!" - கரோனாவில் பாக்யராஜ்! சாந்தனு விளக்கம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

dgxdbdb

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று (07.05.02021) பதிவிட்டார். அதில், தன் பெற்றோர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து சாந்தனு தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"Dear wellwishers

அப்பா compulsory ஓய்வுல இருக்கணும்னு Dr’s அட்வைஸ், அதான் phone’la யார்கிட்டயும் பேச முடியல.
நான் பேசலேன்னு கால் பண்ணவங்க feel பண்ணுவாங்கன்னு அப்பா ரொம்ப feel பண்ணாரு. Sorry, புரிஞ்சுக்குவீங்கன்னு தெரியும். ரெண்டு பேரும் நலமா இருக்காங்க. We will return ur calls soon" என பதிவிட்டுள்ளார்.