
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், ஜூலை 22ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இப்படத்தில் வில்லன் வேம்புலியாக நடிகர் ஜான் கொக்கென் நடித்திருந்தார்.

இவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இவர் தன் கதாபாத்திரம் குறித்தும், நடிகர் அஜித் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியதற்கும், என் மேல் எனக்கு நம்பிக்கை வைத்து என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி அஜித் சார். ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராகவும் மாற நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள். இந்த ‘வேம்புலி’ கதாபாத்திரத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்" என கூறியுள்ளார்.