
ஜெயம் ரவி, 'பூமி' படத்தை தொடர்ந்து 'அகிலன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை 'பூலோகம்' படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 'அகிலன்' படத்தின் படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. இது தொடர்பாக ஒரு மேக்கிங் வீடியோவை வெளியிட்டு டீசர் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.