Skip to main content

பிப்ரவரியில் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ்?

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

dhanush

 

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. பின்னர், படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. 

 

கரோனா பரவலின் வேகம் சற்று குறையத் தொடங்கியதையடுத்து, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு 50 சதவிகித பார்வையாளர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தினை பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்