சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், பத்துக்கும் மேற்பட்ட புது புது கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகவும், தமிழ் சினிமாவில் இதுவொரு சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.
இன்று மாலை ஆறு மணிக்கு இப்படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. சரியாக ஆறு மணிக்கு அப்டேட்விட்ட படக்குழு சொன்னதைபோல அனைவருக்கும் ஆச்சரியத்தைதான் அளித்தது. ஆமாம், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் முன்னர் இந்திய கிரிக்கெட் டீமில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். பின்னர், உடல்நிலை காரணங்களால டீமில் இருந்து தவிர்க்கப்பட்டார்.
‘விக்ரம் 58’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.