Skip to main content

முடிவுக்கு வரும் ‘இந்தியன் 2’ விவகாரம்... பேச்சுவார்த்தையில் தீர்வு..!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

pic_0.jpg

 

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. இதனிடையே, அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவந்த கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் ஷங்கரும் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், ரன்வீர் சிங்குடன் ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து பல்வேறு யூகங்கள் சமூகவலைதளங்களில் பரவிவந்த நிலையில், “‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘இந்தியன் 2’ பட பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கமளித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருப்பதாகவும், ‘விக்ரம்’ படத்தின் படப்படிப்பை நிறைவுசெய்த பிறகு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்