Skip to main content

"இளமை இதோ இதோ..." -இணையத்தில் ட்ரெண்டாகும் இளையராஜாவின் வீடியோ 

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

ilaiyaraaja singing video goes viral

 

இந்தாண்டில் கரோனா, ஊரடங்கு, வேலையின்மை என பல பிரச்சனைகளை சந்தித்தாலும், இவை அனைத்தையும் மறந்து பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று பலரும் தங்களின் கடந்த வருடத்தை நினைவு கூர்ந்தும், வரவிருக்கும் புதிய ஆண்டிற்கு வாழ்த்து கூறியும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

ad

 

அந்தவகையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கமல் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற விஷ் யூ ஹாப்பி நீயூயர்' என்ற பாடலை இசைஞானி இளையராஜா பாடி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது. 

 

புத்தாண்டை கொண்டாட  எத்தனை பாடல்கள் திரைப்படத்தில் வந்தாலும் கடந்த 1982 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'விஷ் யூ ஹாப்பி நீயூயர்' பாடல் இன்றைய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்