சமீபத்தில் இயக்குனர் ப.ராஞ்சித் ஒரு மேடையில் பேசும்போது, மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார்.
இவரின் இந்த பேச்சிற்கு பல தரப்புகளில் இருந்து விமர்சனம் எழுந்து வருகின்றன. சமூக வலைதளத்தில் ரஞ்சித்தின் இப்பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். “மாமன்னர் ராஜராஜ சோழனை இழிவாக பேசியுள்ள ப.ரஞ்சித்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. திக தலைவர் கி.வீரமணியை அடுத்து இன்று இவர். இவர்கள் அனைவருமே ஜோஷ்வா மதமாற்றும் திட்டத்தின் கையாட்கள். இவர்கள் அனைவரின் குறிக்கோள் தமிழகத்தை கால்டுவெல் மண்ணாக்குவதே” என்று பதிவுசெய்துள்ளார்.