Skip to main content

ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட 'சூரரை போற்று' படத்தின் புது அப்டேட்

Published on 06/11/2020 | Edited on 06/11/2020
soorari potru

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்துள்ளார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  

 

'சூரரை போற்று' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்கள், படத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி, தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

அதைத்தொடர்ந்து 'சூரரை போற்று' படத்தின், ட்ரைலர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அப்படத்திலிருந்து 'நாலு நிமிஷம்' என்ற  பாடலின் லிரிக்கல் வீடியோ, இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 'சூரரை போற்று' படத்திலிருந்து 'காட்டு பயலே' மற்றும் 'ஆகாசம்' பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்