
பாடலாசிரியர் மற்றும் கவிஞரான வைரமுத்து, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து தனது திரை அனுபவம் மற்றும் வாழ்க்கை அனுபவம் குறித்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கமலுடன் சந்திப்பு மேற்கொண்டதை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
“நாளாயிற்று
நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன்
நண்பர் கமல்ஹாசன் அவர்களை
ஒளிபடைத்த கண்களோடு
உரையாடினார்
அரசியல் பேசினோம்;
கலை குறித்துக்
கலந்தாடினோம்;
உடல் நிலை
உணவு நிலை குறித்து
அறிவாடினோம்;
சமூக ஊடகங்கள் குறித்துத்
தெளிவு பெற்றோம்
‘செயற்கை நுண்ணறிவில்
உங்களுக்குப் பயிற்சி
உண்டா’ என்றார்
‘செயற்கை நுண்ணறிவைக்
கவிதைக்குப் பயன்படுத்தினேன்;
ஆனால் அதில்
ஜீவன் இல்லை’ என்றேன்
அடுத்த படத்திற்கான
தலைப்பைச் சொன்னார்.
‘நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்’ என்றேன்
டெல்லிப் பட்டணத்திற்கான
சமிக்ஞை தெரிந்துகொண்டேன்
மகிழ்ந்து விடைகொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். கமல் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சண்டை பயிற்சியாளர்கள் ‘அன்பறிவ்’ இரட்டையர்கள் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.