தற்போதைய டிஜிட்டல் உலகில் தியேட்டர்களின் பயன்பாடு குறைந்து, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் ராஜ்ஜியம் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் தளங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
![nee stream](http://image.nakkheeran.in/cdn/farfuture/umi9JKm4FPH_b7m2p16xqitOeKc4m86p1I3QwDZACs4/1586515712/sites/default/files/inline-images/nee%20stream.jpg)
இதனால் இந்தியாவில் எங்கிருந்தாலும் உலகத்தர படங்களை, சப்ஸ்க்ரைப் செய்திருக்கும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் கண்டு கழிக்க முடியும். அந்த வகையில், மலையாள சினிமா ரசிகர்களுக்கு என்று தனியாக, சிறப்பாக ‘நீஸ்ட்ரீம்’ என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தளம் தற்போது அமெரிக்கா, கனடா நாடுகளில் இயங்கி வருகிறது. விரைவில் உலகம் முழுக்க இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ‘நீஸ்ட்ரீம்’ தலைமை அதிகாரி ஆசிஃப் இஸ்மாயில்,''நீஸ்ட்ரீம் தளம் மூலம் இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்குவதே எங்கள் நோக்கம். தரமான உள்ளடக்கங்களின் மூலம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். கேரளா மற்றும் உலகம் முழுவதுமுள்ள மலையாள மக்களிடையே உள்ள சிறந்த படைப்பாளிகளையும், அதீத திறமைசாலிகளையும் ‘நீஸ்ட்ரீம்’ கண்டறியும்'' என்று தெரிவித்துள்ளார்.