லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை காயத்ரியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் விக்ரம் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
இவ்வளவு பெரிய படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை. ’சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணாதான் என்னை சினிமாவிற்கு அழைத்துவந்தார். கமல் சாருடன் இணைந்து நடிக்க ரொம்பவும் ஆசைப்பட்டேன். ஆனால், அது நடப்பதற்கு பத்து ஆண்டுகளாகிவிட்டன.
பகத் ஃபாசில் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தில் அதுவும் நடந்துவிட்டது. பகத் ஃபாசிலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு கை, கால்களெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னால பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கையில்லை என லோகேஷ் கனகராஜுக்கு மெசேஜ் அனுப்பினேன். ’இதுக்குத்தான ஆசைப்பட்ட, சாவுனு’ லோகேஷ் சொன்னார்.
படத்தில் வேலை பார்த்த எல்லோருமே கூலாகவும் டெடிகேட்டாகவும் இருந்தார்கள். இந்தப் படத்தில் நடித்ததில் ரொம்பவும் சந்தோசம்”.