எதிர்நீச்சல் சீரியலின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மோனிஷா உடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
நடிப்பு தொடர்பான பல விஷயங்களை நான் கற்றுக்கொள்வதற்கு எதிர்நீச்சல் சீரியல் ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. இந்த சீரியலில் மாரிமுத்து சார் என்னுடைய அப்பா கேரக்டரில் நடிக்கிறார். சீரியலில் அவர் ஒரு நெகட்டிவ் கேரக்டரை ஏற்றிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் அவர் ரொம்ப பாசிட்டிவான மனிதர். செட்டில் அவரோடு ஜாலியாக விளையாடுவோம். கனிகா மேடம் நிஜ வாழ்விலும் ஒரு தாய் போன்றவர். அவருடைய தைரியம் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.
பியானோ கிளாசுக்கு சென்று இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதற்கான தேர்வுகளிலும் வெற்றி பெற்றேன். கீபோர்ட் வாசிக்கவும் கற்றுக் கொண்டுள்ளேன். சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் பிறந்தது. சினிமாவில் வரும் சண்டைக் காட்சிகளைப் பார்த்து தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்ததால் அதையும் கற்றுக்கொண்டேன். கின்னஸ் உலக சாதனை வரை சென்றது மகிழ்ச்சி. எனக்கு ட்ரம்ஸ் வாசிக்கவும் தெரியும். நானும் என்னுடைய சகோதரியும் சேர்ந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம்.
கல்வியை எந்த நேரத்திலும் நான் கைவிட்டதில்லை. ஷூட்டிங்கிலேயே உட்கார்ந்து படிப்பேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. சினிமாவுக்குத் தேவையான திறமைகள் அனைத்தையும் வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும். ஆச்சி மனோரமா போல் எந்த கேரக்டர் செய்தாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
நம்முடைய தலைமுறை, குறிப்பாகப் பெண்கள் நிறைய சாதிக்க வேண்டும். கல்விதான் பிரதானம். அதன் பிறகு தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளலாம். தாங்கள் விரும்பும் அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்.