Published on 21/11/2018 | Edited on 21/11/2018
உலகப்புகழ் பெற்ற நிறுவனமான வால்ட் டிஸ்னி, சில நாட்களுக்கு முன்பு டம்போ என்ற திரைப்படத்தின் தமிழ் ட்ரைலரை வெளியிட்டது. இத்திரைப்படம் சர்கஸ் கூடாரத்திலுள்ள ஒரு யானைக்குட்டியின் கதையை மையமாகக் கொண்டுள்ளது. இந்த ட்ரைலரில் ஒரு யானைக்குட்டி இருக்கிறது, அதற்கு பறக்கும் சக்தி உள்ளது, அதை அடைய சிலர் முயற்சிக்கின்றனர். இப்படியாக அந்த ட்ரைலர் தொடர்கிறது. ட்ரைலரின் தொடக்கத்தில் வரும் உங்கிட்ட அபூர்வமான ஏதோ ஒன்னு இருக்கு, அது ஆச்சர்யமானது, அதிசயமானது, அபாரமானது. என்ற வசனமும், முடிவில் வரும் இதை பார்த்தா அதிசயம்னு சொல்றாங்க என்ற வசனமும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது. மார்ச் 19ல் வெளியாகவிருக்கும் இந்தப் படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.