அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு 'டான்' படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
சமீபத்தில் 'டான்' படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழு அடுத்த பாடலை நேற்று(3.2.2022) வெளியிட்டது. இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் ஆதித்ய குரலில் கலர்புல்லான காதல் பாடலாக வெளியாகியுள்ள இப்பாடல் யூடியூப் தளத்தில் 1.9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.