
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க அனிருத்தே இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது தமிழ்நாடு - கேரளா எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் ரஜினியும் கலந்து கொண்டுள்ளார். இதனால் அவரை பார்ப்பதற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே ரசிகர்கள் கூடினர்.
பின்பு ரஜினி வெளியே வந்ததும் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேலும் அவரை சூழ்ந்து கொண்டு ‘தலைவா... தலைவா...’ என ஆர்ப்பரித்தனர். அவர்களை கண்ட ரஜினி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பின்பு காரில் ஏறி சென்றார்.
pic.twitter.com/c3usk17HtA— Dass Ragavan (@Kavidhasan4) April 16, 2025