சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் உதவி இயக்குநராக தான் பணியாற்றிய நாட்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
தெறி, மெர்சல் படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்துவிட்டு படம் பண்ண முயற்சி செய்துகொண்டு இருந்தேன். 5 வருட முயற்சிக்கு பிறகு தற்போது டான் படம் பண்ணி, படம் ரிலீஸ் ஆகப்போகிறது. முதல் படத்திலேயே சிவகார்த்திகேயன், அனிருத், லைக்கா ப்ரொடக்ஷன்ஸ், எஸ்.கே.ப்ரொடக்சன்ஸ் என பெரிய காம்போ அமைந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. தெறி, மெர்சல் படங்களில் வேலை பார்த்தபோது நிறைய கற்றுக்கொண்டேன். மெர்சல் படத்தில் திருவிழா காட்சியில் 2000 பேரை செட் செய்யும் பொறுப்பை என்னை நம்பி அட்லீ வழங்கினார். இதை இப்படி செய்யக்கூடாது, இப்படி செய்யவேண்டும் என நிறைய ஆலோசனைகள் கூறுவார்.
நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள அது உதவியது. நான் அசிஸ்டன்ட்டாக வேலை பார்த்த இரண்டு படமுமே விஜய் சார் படமென்பதால் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் எடுத்த பைலட் படம் பார்த்துவிட்டு ரொம்பவும் நல்லா இருக்கு என்று விஜய் சார் சென்னார். அவர் பாராட்டியது எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. விஜய் சார், அட்லீ சார், மகேந்திரன் சார் பாராட்டியது எல்லாம்தான் மிகப்பெரிய நமபிக்கையை எனக்கு கொடுத்தது.