Skip to main content

வெற்றி இயக்குனருடன் மூன்றாவது முறையாக கை கோர்ப்பாரா விஜய்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 

viajy latest

 

 

இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது. 
 
இந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.
 
#தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 2019 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஏப்ரல் 2020ல், ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு தற்போது நடிகர் விஜய்க்காக ஒரு கதை எழுதியிருக்காராம். இந்த கதையை எப்படியாவது விஜய்யிடம் சொல்லி ஓக்கே வாங்கிடவேண்டும் என்று மும்முரமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விஜய் லோகேஷ் கனகராஜ் படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்