Skip to main content

“ராம் சொன்னதை கேட்டு பயங்கரமாக கண்ணீரே வந்துவிட்டது”- இயக்குனர் மிஷ்கின் சிறப்பு பேட்டி! 

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

துப்பறிவாளன் படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குனர் ராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்திற்கு பி.சி.ராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார் பின்னர் அவர் விலகிக்கொள்ள அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். 
 

myskin

 

 

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக இயக்குனர் மிஷ்கின் நமக்கு அளித்த பேட்டியின்போது சைக்கோ படம் குறித்தும், அவரது தனிப்பட்ட சமூக பார்வை குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது, அவருக்கும் இயக்குனர் ராமுக்குமான நட்பு எத்தகையது, அவரை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மிஷ்கின், “முதலாவது, ராம் மிகவும் நல்லவர். இரண்டாவது, நேர்மையான திரைப்பட கலைஞர். என்னை அண்ணா என மதிக்ககூடியவர் இயக்குனர் ராம். அன்று ஒரு நாள் இரவு எனக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு, அண்ணா உனக்கு நிறைய பிரச்சனைகள் போய்கொண்டு இருக்கிறது. நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் என்னை அழையுங்கள். நான் வந்து உங்களை அரவணைத்துக் கொள்கிறேன். நீங்கள் எதுவும் கோபப்படாதீர்கள் என்று சொன்னார். எனக்கு அதை கேட்டவுடன் பயங்கரமாக கண்ணீரே வந்துவிட்டது. என்னுடைய சொந்த தம்பி கூட அப்படி சொல்லவில்லை, அவர் அப்படி சொன்னவுடன் எனக்கு நெகிழ்வாகிவிட்டது. அவர் மிகவும் நல்லவர், அதனால்தான் அவரால் பேரன்பு போல ஒரு நல்ல படத்தை எடுக்க முடிந்தது. அவர் நல்ல மனிதர். என்னுடைய இரண்டு படங்களிலும் நடிக்கிறார்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்