சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் சிபி சக்கரவர்த்திக்கு வர்ஷினி என்பவருடன் கடந்த 5ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 'டான்' படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.