வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'அண்ணனுக்கு ஜே'. அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதாரவி,மயில் சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி உள்ளார். எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது விழாவில் நடிகர் தினேஷ் பேசியபோது... "இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மஹிமா அருமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார். ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்" என்றார்.