Skip to main content

மலையாள பேயுடன் மல்லுக்கட்டும் சந்தானம் 

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
santhanam

 

 

 

சந்தானம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'தில்லுக்கு துட்டு' படத்தின் 2ஆம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. ராம் பாலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் ராம்பாலா பேசியபோது.... "தில்லுக்கு துட்டு 2 முதல் பாகத்தை விட மிகவும் ஜாலியான படமாக இருக்கும். இது, நகைச்சுவை கலந்த திகில் படம். என்றாலும் படத்தில் நிறைய சீரியசான திகில் காட்சிகள் உள்ளன. இந்த படம் கதாநாயகியின் கதாபாத்திரம் மீது பயணிக்கும் கதையம்சம் கொண்டது. மலையாள பட உலகில் பிரபலமாக இருக்கும் ஷிர்தா சிவதாஸ் படத்தின் கதாநாயகி. கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் தேவை என்பதால்தான் இவரை கதாநாயகியாக தேர்வு செய்தோம். மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் பிபின் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் சிறப்பாக வந்து இருக்கிறது. நாங்கள் கடுமையாக உழைத்து, அதிக கவனம் செலுத்தி, இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். முதல் பாகம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் வெளியீடாக படம் திரைக்கு வரும்" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்