உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 10-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான கெய்ல் மற்றும் லிவீஸ் உடனடியாக அவுட்டாக அடுத்த வந்த வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அம்பையர்கள் அவுட் இல்லாததை எல்லாம் அவுட் தந்துவிட்டனர். ஒருதலைபட்சமாக அம்பையர்கள் செயல்படுகின்றனர் என்ற விமர்சனம் நேற்று சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் நடிகர் தனுஷும் அம்பையர்களை விமர்சித்து ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில், “வெஸ்ட் இண்டீஸ் எந்த சூழ்நிலையிலும் வெற்றிபெறக்கூடாது என அம்பையர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அம்பையர்களுக்கு வாழ்த்துகள். வெஸ்ட் இண்டீஸ் நன்றாக விளையாடினீர்கள். அதே நிலையில் சிறந்த ஐசிசியின் புவர் அம்பையரிங்கையும் பார்க்க வேண்டும். அம்பையர்களின் ஒருதலைபட்சத்தயும்தான்” என்று பதிவிட்டுள்ளார்.