Skip to main content

நடிகையின் பதிவில் மோசமான வார்த்தைகளால் கமெண்ட் செய்த நபர் கைது! 

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
sonakshi sinha

 

 

சைபர் புல்லிங்கிற்கு எதிராக மும்பை போலீஸார் மற்றும் சைபர் நிபுணர்களுடன் இணைந்து ‘மிஷன் ஜோஷ்’ என்ற அமைப்பை தொடங்கினார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.  

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இணையத்தில் நடைபெறும் கேலி, கிண்டல் குறித்து சோனாக்‌ஷி சின்ஹா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் சிலர் மிகவும் மோசமான அருவருக்கத்தக்க வகையில் கமெண்ட் செய்துள்ளனர். அவ்வாறு செய்தவர்களின் பெயர்களின் லிஸ்ட்டை எடுத்து மும்பை போலீஸாரிடம் ஒப்படைத்தார் சோனாக்‌ஷி. அதனடிப்படையில் அவுரங்காபாத்தை சேர்ந்த சசிகாந்த் குலாப் ஜாதவ் என்ற 27 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

 

போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள சோனாக்‌ஷி, “என்னுடயை புகாரின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த மும்பை சைபர் க்ரைம் போலீஸாருக்கு நான் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். மற்றவர்களும் இதேபோல துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அவர்கள் மீது புகார் அளித்தேன். நமக்கும் மற்றவருக்கும் நடக்கும் ஆன்லைன் கிண்டல்களை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்