Skip to main content

“வீரப்பன், பின்லேடன் பயோபிக்குகளுக்கு மட்டும் அனுமதி உண்டோ?” -கோமாளி இயக்குனர் கேள்வி! 

Published on 20/10/2020 | Edited on 20/10/2020
pradeep

 

 

முத்தையா முரளிதரனாக, விஜய் சேதுபதி நடிப்பதற்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் அமைப்புகள், தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தன.

 

இந்நிலையில், "தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு இத்திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை கேட்டுகொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் விஜய் சேதுபதி அதைப் பகிர்ந்து, "நன்றி! வணக்கம்!" என்று பதிவிட்டிருந்தார். இதன்பின் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, "நன்றி! வணக்கம்!" என்றால் 'எல்லாம் முடிந்துவிட்டது' என்பதுதான் பொருள் என்று விளக்கினார்.

 

இந்த படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகியதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை விமர்சித்தவர்களை கேள்வி கேட்கும் வகையில், “பயோபிக் என்பது எவரைப் பற்றியும் எடுக்கலாம் என்று நான் நினைத்தேன். மதர் தெரசாவோ, ஹிட்லரோ, அந்த நபர் தவறானவர் என்று நினைத்தால், தவறான ஒரு நபரைப் பற்றிய படமாக இருக்கட்டுமே. அதேபோல அவர் நல்லவர் என்றால், நல்லவர் ஒருவரைப் பற்றிய படமாக இருக்கட்டுமே. ஏன் அதைத் தடுக்க வேண்டும்? வீரப்பன், பின்லேடன் ஆகியோரைப் பற்றிய பயோபிக்குக்கு மட்டும் அனுமதி உண்டோ?” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்