![Sivakarthikeyan](http://image.nakkheeran.in/cdn/farfuture/rlDMoksX8dT3laDYMUKDDv3lsY8jqJeysJ92BurhBWA/1614594317/sites/default/files/inline-images/sivakarthikeyan_23.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் தயாரிக்கிறது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/9pw0fRfXg9FDKdGntGRdcKT1CzJYhDvYHKcM7F74M1U/1614600769/sites/default/files/inline-images/article-inside.png)
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லம்மா' பாடல், கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடல், தற்போது யூ-டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'அனிருத்திடம் இருந்து மற்றொரு சதம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Another century from our Rockstar @anirudhofficial 😎🥳 #100MForChellamma ♥️ - https://t.co/AX2NM3ITWr #DOCTORfromMarch26 #Doctor @Nelsondilpkumar @priyankaamohan @KVijayKartik @jonitamusic @SKProdOffl @KalaiArasu_ @kjr_studios @SonyMusicSouth pic.twitter.com/wwPpkJmHT8
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 1, 2021
டாக்டர் திரைப்படம் இம்மாதம் 26-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், செல்லம்மா பாடல் 100 மில்லியன் மைல்கல்லை தொட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம்.