ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் 'கயல்' சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் உருவாகும் இப்படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் வழக்கமான விழாவாக இல்லாமல் வித்தியாசமானதாக விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்போது விழாவில் நாயகன் 'கயல்' சந்திரன் இப்படம் குறித்து பேசும் போது.... "இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள்.
நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணாவின். 'ஆஹா' படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும் படி இருக்கும். பெண்கள் படும் கஷ்டம் ஆண்களும் பட்டால் தான் தெரியும் என்று சொல்கிற படம். படக் குழுவினர் நட்புடன் பழகிய விதம் எனக்குப் பிடித்தது" என்றார். மேலும் நாயகி அஞ்சு குரியன், நடிகர் மிர்ச்சி விஜய், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா, கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன், எடிட்டர் மணிக்குமரன் சங்கரா, நிர்வாகத் தயாரிப்பாளர் சுரேஷ் ராஜா, இணைத் தயாரிப்பாளர் எஸ்.பி. சுரேஷ், தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார், தயாரிப்பாளர்கள் டெல்லி பாபு, பானு பிக்சர்ஸ் ராஜா, விநியோகஸ்தர் ஜேகே தொழிலதிபர்கள் ஆனந்த், விஜய் டோஹோ, ரகுநாதன், ரோஹன் பாபு, திருமதி ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.