Skip to main content

தமிழர்களை இதனால்தான் பிடிக்கும் காரணத்தை சொன்ன பாலிவுட் நடிகை....

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

2.o படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. இந்த படம் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, இன்றுதான் திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட படம், இந்திய சினிமாவில் அதிக தொகை செலவிட்ட படமாகியுள்ளது. இந்த படத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் இன்று 2.o படம் வெளியாகியுள்ளது.
 


தீராத விளையாட்டு பிள்ளையில் நடித்துள்ள நடிகை நீது சந்திரன் 2.0 படம் குறித்து ட்விட்டரில், “இதனால்தான் தமிழக மக்களையும், தமிழ் சினிமாவையும் எனக்கு பிடிக்கிறது. படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் மும்பையில் காலை ஐந்து மணி முதல் காட்சியில் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டத்தை வீடியோவாக எடுத்து பதிவிட்டிருந்தார். 
 

இதனையடுத்து, இன்னுமொரு பதிவில் பெரும்பாலான தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் ரீமேக்தான் பாலிவுட்டின் சூப்பர் ஹிட் படங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்