Published on 10/03/2025 | Edited on 10/03/2025

‘நாடோடிகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அபிநயா. இவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.
கடைசியாக மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் வெளியான ‘பனி’ படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு திருமண நிச்சயம் நடந்து முடிந்துள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிரம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் வருங்கால கணவர் குறித்த விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. இதையடுத்து இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.