Skip to main content

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கம்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

Bhagyaraj expelled from South Indian Actors Association

 

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் கே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். இத்தேர்தலின் முடிவுகள் சில வழக்கு காரணத்தால் இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதில் நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்று தற்போது பதவி ஏற்றுக்கொண்டு வழி நடத்திவருகின்றனர்.

 

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கம், பாக்யராஜூக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில், சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில உறுப்பினர்கள் நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன் படி ஏன் உங்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு, 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. மேலும் இதே போல் நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.உதயாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. 

 

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் மற்றும் உதயா உள்ளிட்ட இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நீக்கியுள்ளது. நடிகர் சங்க விதி 13-ன் படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவே அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லக் கூடாது என விதி உள்ளது. இதன் காரணமாக நடிகர் சங்கத்தில் இருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்