Skip to main content

ஓவியா படத்தின் டீஸரை வெளியிட்ட கே.பாக்யாராஜ்

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
oviya

 

 


'இமாலயன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம்  'ஓவியா'.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக  நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் 'ஓவியா'வாக நடிக்கிறார். இந்நிலையில் 'ஓவியா' படத்தின் டீஸரை இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்கள் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக சமீபத்தில் வெளியிட்டார். அந்நிகழ்ச்சியில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத் , எடிட்டர் திரு. சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கடலூரில் சிறப்பாக செயல்பட்டு வரும் டி.எஸ்.மீடியா என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அப்பா ரொம்ப ஃபீல் பண்ணாரு... சாரி!" - கரோனாவில் பாக்யராஜ்! சாந்தனு விளக்கம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

dgxdbdb

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று (07.05.02021) பதிவிட்டார். அதில், தன் பெற்றோர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து சாந்தனு தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"Dear wellwishers

அப்பா compulsory ஓய்வுல இருக்கணும்னு Dr’s அட்வைஸ், அதான் phone’la யார்கிட்டயும் பேச முடியல.
நான் பேசலேன்னு கால் பண்ணவங்க feel பண்ணுவாங்கன்னு அப்பா ரொம்ப feel பண்ணாரு. Sorry, புரிஞ்சுக்குவீங்கன்னு தெரியும். ரெண்டு பேரும் நலமா இருக்காங்க. We will return ur calls soon" என பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

கே. பாக்யராஜ் தம்பதியருக்கு கரோனா தொற்று உறுதி! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

gdsgdsgsdgdsgs

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் பெற்றோர் கே. பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.