Published on 20/11/2018 | Edited on 20/11/2018
சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்போது லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரிக்கும் 'அயோக்யா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத், விசாகபட்டினம் தொடர்ந்து தற்பொழுது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் 'அயோக்யா' படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. தெலுங்கு முன்னணி நடிகை ராஷி கன்னா நாயகியாக நடிக்கும் இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். மேலும் ஆர்.பார்த்திபன், கே.எஸ் ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் வரும் ஜனவரி 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது. ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.