Published on 11/09/2019 | Edited on 11/09/2019
அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றிபெற்றன.

தற்போது தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு சினிமாவில் பயங்கர பிசியாக உள்ளார். இந்நிலையில் இதுவரை இவர் நடித்த அனைத்து படங்களிலும் மிகவும் ஹோம்லியாக, குடும்ப பாங்கான பெண்ணாக, கவர்ச்சி எதுவும் காட்டாமல் நடித்திருந்தார். தற்போது மிகவும் கவர்ச்சியாக, மாடர்னாக உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
