அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் திடீரென காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளை காட்டுத்தீ சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்களின் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்க அரசும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளுக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
தீயை அணைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரபல கூடப்பந்து வீரரான லிபுரோன் ஜேம்ஸ் என்பவருடைய சொகுசு வீடு எரிந்து நாசமானது என்று லிபுரோன் ஜேம்ஸே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான அர்னால்டின் வீட்டையும் காட்டுத் தீ சூழ்ந்தது. இதனால் வீட்டுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு தப்பி செல்ல வழியில்லாமல் தவித்தார் அர்னால்ட்.
2 தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக சென்று அர்னால்டை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர். தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்று ட்விட்டரில் அர்னால்ட் பாராட்டி உள்ளார். இதுபோல் காட்டுத் தீயில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்கள் கிளார்க் கெர்க், கர்ட் சட்டர் ஆகியோரையும் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.