
டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 1ஆம் தேதி ஆரம்பித்த சினிமா ஸ்ட்ரைக் தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா துறையே முடங்கியுள்ளது. மேலும் சினிமாவை நம்பி இருக்கும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாளை அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கயிருக்கின்ற சமயத்தில் தற்போது நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில்..."நீண்டகால சினிமா ஸ்டிரைக்கால் சோர்வடைந்து வருகிறேன். மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். போராட்டத்தை முன்வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முன்னேற்றம் கிடைத்துள்ளது என்பது எனக்கு தெரியாது. அனைவருமே விரைவில் பணிக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. போராட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே விரைவான தீர்மானங்களை கொண்டுவர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.