இந்தியாவில் தமிழகத்தை பெரும்பாலும் மற்ற மாநிலத்தவர்கள் தங்களின் பெயர்களுக்கு பின்னால் தங்களின் சாதி பெயர்களை சேர்ப்பது தற்போதும் வழக்கத்தில் இருக்கிறது.
![amitab bachan](http://image.nakkheeran.in/cdn/farfuture/LZ9lCaFdXXMgkrEw48EPAEDkAufkIdSgmhp9-lTU9Cc/1570693931/sites/default/files/inline-images/amitab-bachan.jpg)
சமீபத்தில் கூட மலையாள பட நடிகை பார்வதி மேனன், தனது பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் அவசியமற்றது என்று கூறி அதை கைவிட்டுவிட்டார்.
![sss](http://image.nakkheeran.in/cdn/farfuture/XfzRuqIhmWIrdWrSGTwd-ewvxtErkiWavHnI4BkTMbs/1570693976/sites/default/files/inline-images/500X300_54.jpg)
இந்நிலையில் சமுக அக்கறையுடன் பல விஷயங்களை செய்து வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பெயரில் ஏன் சாதி இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
![sss](http://image.nakkheeran.in/cdn/farfuture/7H09TZWm4K74-uzSCi0PGzQ7oi3WPbdHWIr9JwZoj-M/1570693998/sites/default/files/inline-images/500x300-article-inside_53.jpg)
இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அப்போது பேசியவர், “பச்சன் என்பது எனது குடும்ப பெயர். எந்த மதத்தையும், சாதியையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்து கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது என் தந்தையிடம் குடும்ப பெயர் குறித்து கேட்டனர். அப்போது பச்சன் என்பதை குடும்ப பெயராக வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது கூட மதம் பற்றி என்னிடம் கேட்பார்கள். அவர்களிடம் நான் இந்தியன் என்று கூறுவேன். நான் எந்த மததையும் சேர்ந்தவன் இல்லை” என்றார்.