![amaran movie sai pallavi first look released](http://image.nakkheeran.in/cdn/farfuture/2a7yQ444OL7vVejWZPnZOnh42twr0elGXHlv5Ld342M/1715254774/sites/default/files/inline-images/03_91.jpg)
தன் யதார்த்த நடிப்பு மூலம் ரசிகர்களைக் கவர்ந்த, சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, தெலுங்கில் நாக சைத்தன்யா நடிக்கும் ‘தண்டல்’ மற்றும் இந்தியில் ராமாயண கதையில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘தண்டல்’ படக்குழு வாழ்த்து தெரிவித்து சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதைனைத் தொடர்ந்து தற்போது அமரன் படக்குழுவும் வாழ்த்து தெரிவித்து படத்தின் சாய்பல்லவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது.
![amaran movie sai pallavi first look released](http://image.nakkheeran.in/cdn/farfuture/wWp7toJp1BSecpU4RZmX4YrMjxJwnz_DwO16NsfY-SY/1715254789/sites/default/files/inline-images/04_76.jpg)
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமல்ஹாசன் அவரது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்க, உண்மை சம்ப அடிப்படையில் இப்படம் உருவாகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் முகுந்த் வரதராஜ் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.