
விமல் நடிப்பில் ‘ஓம் காளி ஜெய் காளி’ என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இத்தொடரில் குவீன்ஸி, புகழ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டர் ஓ.டி.டி. தளத்தில் வருகிற 28ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போது படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறது.
இந்த நிலையில் ‘ஓம் காளி ஜெய் காளி’குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோஸ் சார்பில் சந்தித்தோம். அப்போது பேசிய விமல், புகழ், பாவ்னி உள்ளிட்ட குழுவினர் தொடர் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது விமலிடம் அவரது திரை வாழ்க்கையில் பெரிய வெற்றி மற்றும் எதிர்பாராத தோல்வி, இந்த இரண்டிலும் கற்றுக்கொண்டவை என்ன என்ற கேள்வி கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், “எல்லா படத்திலும் நல்லா ஓடனும்னு நினைச்சு தான் நடிக்கிறோம். முன்னாடி வலுக்கட்டாயமா நடிச்சே ஆகனும்னு ரெண்டு மூணு படங்கள்ல நடிச்சேன். எனக்கு பிடிக்கலைன்னாலும் மத்தவங்களுக்காக அதை பண்ணேன். ஆனா இப்போ நமக்கு பிடிக்கலைன்னா அந்த படத்த பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றார்.