
'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி மும்பை, கர்நாடகா என பல்வேறு இடங்களில் நடந்தது. இப்படத்தில் இருந்து கடந்த யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ஆம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில் போதைப்பொருள் மற்றும் மது அருந்தும் கிளப்பிற்கு யஷ் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இப்படத்தின் அறிவிப்பு ஒரு மோஷன் போஸ்டர் வீடியோவுடன் கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. அதில் இந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அது தள்ளி போகவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் யஷ் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏற்கனவே கே.ஜி.எஃப் 2 படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் இந்தாண்டு படக்குழு முன்பு அறிவித்தது போல் ஏப்ரல் 10ஆம் தேதி யஷ் படத்தை காணலாம் என ஆவலாக இருந்தனர். ஆனால் இப்போது அது தள்ளி போகியுள்ளதால் வருத்தத்தில் உள்ளனர்.
A Fairy Tale for Grown-Ups… Toxic takes over on 19-03-2026 ⚡#ToxicTheMovie#TOXIC @TheNameIsYash #GeetuMohandas @KVNProductions #MonsterMindCreations @Toxic_themovie pic.twitter.com/S9QBRcNOir— KVN Productions (@KvnProductions) March 22, 2025