Skip to main content

டைரக்டர் எனக்கு எப்படி கதை சொன்னார் தெரியுமா...? அமலா பால்

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
amala paul

 

விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்திருக்கும் படம் 'ராட்சசன்'. திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை 'முண்டாசுப்பட்டி' பட இயக்குனர் ராம் குமார் இயக்கியுள்ளார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகை அமலா பால் பேசும்போது.... "இந்த படத்தில் நடிக்கும்போதே, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரிலீஸுக்காக ரொம்ப நாளாகவே காத்திருக்கிறோம். இயக்குனர் ராம் எனக்கு கதையை சரியாக சொல்லவில்லை. பின் விஷ்ணு தான் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என சொல்லி, அவரே கதையை எனக்கு விளக்கினார். 

 

 

 

கதை ரொம்பவே பிடித்தது. ராம் ரொம்பவே கடின உழைப்பாளி, நேரம் எடுத்து மிகவும் விரிவாக, தெளிவாக படத்தை எடுப்பார். அவர் ஒரு ஜீனியஸ். சினிமாவில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது, விஷ்ணு இந்த படத்துக்கு பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார். நடிக்க வருபவர்களுக்கு விஷ்ணு ஒரு இன்ஸ்பிரேஷன். படத்துக்காக அவருடைய உழைப்பு அபரிமிதமானது. ஒட்டுமொத்த படக்குழுவும் படம் சிறப்பாக வருவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். திரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள். ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கும்" என்றார்.

அமலா பால் பேசிய வீடியோவிற்கு கீழே கிளிக் செய்யவும் 

 

 

 

 

சார்ந்த செய்திகள்