அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். பலர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று இவ்வளவு தைரியமாக ஆடையின்றி நடித்ததற்கு பாராட்டினார்கள். அதேசமயம் பலர் இந்த படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்ததற்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்கள். இப்படி சர்ச்சையில் சிக்கிதான் அந்த படம் வெளியாகி வெற்றியடைந்தது.
![amala paul](http://image.nakkheeran.in/cdn/farfuture/289b2re-7vmCocTFWoEV_UNfTqzH5zNYg53-__7BICA/1570624951/sites/default/files/inline-images/amala-paul-kiara-advani.jpg)
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர்களால் நெட்பிளிக்ஸ் இணையதளத்திற்காக எடுக்கப்பட்ட படம்தான் லஸ்ட் ஸ்டோரீஸ். இந்த படம் பெயரில் தொடங்கி, படத்தில் இருக்கும் காட்சிகள் வரை அனைத்திலுமே சர்ச்சையில் சிக்கியது. நான்கு இயக்குனர்கள் சேர்ந்து நான்கு சிறு பகுதிகளை இயக்கி ஒரே படமாக வெளியிட்டிருந்தனர். இந்த படத்தில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
![sss](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y7fiDVgGp82vW1jokNLB5E8UtmFD8UuQQlno3GGANjg/1570625034/sites/default/files/inline-images/500x300-article-inside_38.jpg)
இதில் கியாரா அத்வானி நடித்திருக்கும் பகுதியில் கியாரா தனது கணவர் மற்றும் மாமியார் முன்பே சுய இன்பம் காண்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பகுதியை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் இயக்கியிருந்தார். பல சர்ச்சைகள் இந்த படத்தின் மேல் இருந்தாலும் நெட்பிளிக்ஸில் அதிகம்பேர் பார்த்த படம் என்கிற வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த சீரீஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
![klkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/mZ5vdJf9uA2LhjuDNWnB43iJwMx4gHsX6mEHtX2Fdfo/1570625054/sites/default/files/inline-images/500X300_35.jpg)
இந்த படத்தில் அமலா பால், கியாரா அத்வானியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.