Skip to main content

யூ-ட்யூபரிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்ட சூப்பர் ஸ்டார்!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
akshaykumar

 

 

தற்போதைய கால கட்டத்தில் யூ-ட்யூபர்கள் பலரும் நாட்டில் கவனம் பெறும் சம்பவங்கள் குறித்து எதையாவது பேசி, அதை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் தரவுகள் எந்தளவிற்கு உண்மையானது என்பது தெரியாது.

 

பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட பிறகு அது கொலை, திட்டமிட்ட கொலை, அவரை சில பிரபலங்கள்தான் சில காரணங்களுக்காக கொன்றுவிட்டார்கள் என்று போலீஸ் விசாரணை ஒருபக்கம் நடைபெறும்போதே யூ-ட்யூபில் பல கண்ணோட்டத்தில் தரவுகள் இல்லாமல் பலர் பேசி வந்தனர்.

 

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் அவருடைய காதலி ரியா சம்மந்தப்பட்டிருக்கிறார் என்கிற கண்ணோட்டத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. அதன்பின் அவர் போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். தற்போது நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வந்த பீகாரைச் சேர்ந்த ரஷீத் சித்திக் என்னும் யூ-ட்யூபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சிவில் இஞ்சினியர் பட்டப்படிப்பை முடித்த 25 வயது இளைஞரான ரஷீத் எஃப் எஃப் நியூஸ் என்று யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த நான்கு மாதங்களில் சுஷாந்த் மரணம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டு, ரூ. 15 லட்சம் சம்பாதித்துள்ளார்.

 

இந்நிலையில் சுஷாந்த் மரணத்தில் மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே இருவருக்கும் சம்மந்தம் இருக்கிறது என்று தவறான தகவலை பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அந்த வீடியோவில் நடிகை ரியா சக்ரபோர்த்தியை கனடாவுக்கு தப்பித்து செல்ல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் உதவி செய்துள்ளார் என்று வதந்தியை கிளப்பியுள்ளார். இதற்காக அக்‌ஷய் குமார் தரப்பில் அவர் மீது 500 கோடிக்கு மானநஷ்ட வழக்கு போடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்