அஜித் குமார் ‘வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற நாடு கடந்த பயணங்களையும் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் வழி நடத்தியுள்ளது.
அந்தமானின் ரம்பிள் தீவில் ஹார்லி-டேவிட்சன் நிகழ்வில் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனத்தின் இந்த சமீபத்திய முயற்சி சாதனை படைத்தது. ஹார்லி-டேவிட்சன் மெரினா பிரிவு, சென்னை மற்றும் ஹார்லி-டேவிட்சன் பஞ்சாரா பிரிவு, ஹைதராபாத் ஆகியவற்றுடன் இணைந்து வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் இந்த நிகழ்வை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடத்தியது.