
நடிகர் விஜயின் நெருங்கிய சொந்தக்காரரும், 'மாஸ்டர்' படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகளுக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சேவியரின் மகள் சினேக பிரிட்டோ. இவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷும் சிங்கப்பூரில் ஒன்றாகக் கல்வி பயின்றுள்ளனர். அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் நிச்சயதார்த்தத்தில் கூட நடிகர் விஜய் கலந்துகொண்ட வீடியோ, புகைப்படங்கள் பெரிதும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்தே திருக்குழுக்குன்றத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
கரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும் அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகாஷ் முரளி - சினேகா பிரிட்டோ தம்பதிக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.