![Actress Meena donates organs](http://image.nakkheeran.in/cdn/farfuture/JPkIpXu2Y3T_gKbwhLufcnfwdSAurTfR7GprwZS9sFM/1660630776/sites/default/files/inline-images/1574.jpg)
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா, வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். சமீபகாலமாக நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
![Actress Meena donates organs](http://image.nakkheeran.in/cdn/farfuture/_gbGYacZv3EgOD98PAKOO634DeT8AebTgMZokz1du3E/1660630892/sites/default/files/inline-images/500-X-300-Viruman_22.jpg)
இந்நிலையில் நடிகை மீனா உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ஒரு உயிரை காப்பாற்ற கூடிய சிறந்த விஷயம் உடல் உறுப்பு தான். அதை விட சிறந்தது வேறு எதுவும் கிடையாது. எனது கணவர் வித்யாசாகருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைத்திருந்தால், என் வாழ்க்கையே மாறியிருக்கும். ஒரு உடல் உறுப்பு தானத்தின் மூலம் 8 உயிரை காப்பாற்ற முடியும். அனைவரும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதனால் நான் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு எடுத்துள்ளேன். இதுவே நம் பரம்பரையை வாழ வைக்க சிறந்த வழி” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.