Skip to main content

ஜெய் கிட்ட Drink & Drive பண்ணக்கூடாதுன்னு சொன்னீங்களா? (வீடியோ)

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

இயக்குனர் ராமின் ‘கற்றது தமிழ்’ மூலம் அறிமுகமான அஞ்சலி, மீண்டும் ராமின் படைப்பான ’பேரன்பு’-வில் ‘விஜி’ஆக வாழ்ந்த அனுபவம் பற்றியும், நடிகர் மம்மூட்டியின் நடிப்பை பற்றி தான் வியந்த தருணத்தை பற்றியும் இந்நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப்போவதில்லை" - பிரபல நடிகர் பேச்சு!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

FAMOUS ACTOR SPEECH ABOUT HIS POLITICAL ENTRY

 

தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலத்திற்கு சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கட்சிகள், கூட்டணிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் நடிகர்களை தேர்தல் பிரச்சாரங்களில் களம் இறக்கத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் 'மம்முட்டி', கேரள முதல்வர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றுப் படமொன்றில் நடித்து வருகிறார். இதையொட்டி, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது அவர், "தேர்தல் அரசியலில் எனக்கு எவ்வித ஆர்வம் இல்லை. சினிமா அரசியல் உலகில்தான் எனக்கு ஆர்வம். அதைத் தவிர்த்து வேறு அரசியலில் ஈடுபடப்போவதில்லை. எந்தவொரு கட்சியும் என்னிடம் தேர்தலில் போட்டியிடச் சொல்லவில்லை. அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை. நானும் யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை" இவ்வாறு கூறினார்.

 

 

 

Next Story

நான் செய்ததை இந்தியாவில் யாராவது செய்திருப்பார்களா...? - யுவன் ஷங்கர் ராஜா 

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் உருவான ''ஹீரோ'' படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் இப்படம் குறித்து நிகழ்வு ஒன்றில் பேசியபோது...

 

yuvan

 

 

''நம் சமுதாயத்துக்கு இப்போது ஒரு ''ஹீரோ'' தேவை. அதை சரியாக இந்தப்படம் சொல்லிருக்கிறது. நிறைய படத்திற்கு ரீ ரெக்கார்டிங் செய்திருக்கிறேன். ஆனால், இந்தப்படத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரே ஸ்ட்ரெச்சில் ஸ்கோர் செய்திருக்கிறேன். இந்தியாவில் இதுவரை யாரும் இதுபோல் செய்திருப்பார்களா என தெரியவில்லை. எனக்கு அந்த வாய்ப்பை மித்ரன் கொடுத்துள்ளார். எனக்கு சமீபத்தில் மிகத்திருப்தி தந்த படம் “ஹீரோ” படத்தைதான் சொல்வேன். ட்ரைலர் பார்த்தாலே படம் எப்படி வந்திருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்'' என்றார்.