கன்னட சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார், கடந்த 29ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். நடிகர் புனித் ராஜ்குமார் தன் சொந்த மாநில மக்களுக்குப் பல்வேறு சமூக நலத்திட்ட பணிகளை செய்துள்ளார். அதில், 45 இலவச பள்ளிக்கூடங்கள், 19 கோசாலைகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றை நடத்திவந்த புனித் ராஜ்குமார், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷால், புனித் ராஜ்குமார் உதவியால் கல்வி கற்ற மாணவர்களின் கல்வி செலவை தான் ஏற்க உள்ளதாக கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நேற்று (31.10.2021) 'எனிமி' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய விஷால், அவரது உதவியால் படித்த 1,800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
விஷால் - ஆர்யா நடிப்பில், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 'எனிமி' படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது.