Skip to main content

வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத அங்கீகாரம்... பார்த்திபனைக் கௌரவித்த அமீரகம்!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

actor parthiban has been granted golden visa uae

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய  கோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 
 

 

ad

 


இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," கோல்டன் விசா இன்று துபாயில் வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த  ஜுமா அல்மேரி நிறுவனத்தின் சி.இ.ஓ முகமது ஷானித் மற்றும் இதர நண்பர்கள் சொன்னார்கள். விசாரித்துப் பார்த்ததில் உண்மை போலவே தோன்றுகிறது " எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சமீபத்தில் நடிகை திரிஷாவுக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது.இதன் மூலம் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகை த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்