மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார், அமலா பாலை வைத்து ‘ஆடை’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்போதே சர்ச்சையாக இருந்த நிலையில் டீஸர் அதற்கு அடுத்த கட்டமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அமலா பால் ஆடையின்றி நடித்துள்ள ஷாட் அந்த டீஸரில் இடம் பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகையும் எடுக்காத இந்த முயற்சியை அமலா பால் எடுத்திருப்பதால் பலரும் பாராட்டிவருகின்றனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே அமலா பால் நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். சமந்தாவும் பாராட்டி இருக்கிறார். இந்த சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் சமூக சிக்கல்களை பேசுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஆடை படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த பட்த்தின் ட்ரைலர் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராஜ் காஷ்யப் வெளியிட்டுள்ளார்.